வவுனியா பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் பூட்டு!! (படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாரம்பரிய உணவகமான ‘அம்மாச்சி’ உணவகம் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது

அம்மாச்சி உணவகத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வையின் அடிப்படையில் அம்மாச்சி உணவகத்தில் சில சுகாதார சீர்கேடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்யுமாறும் அம்மாச்சி உணவக நிர்வாகத்தினருக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையிலும் அம்மாச்சி உணவகத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும் அம்மாச்சி உணவகம் நேற்று (09.09.2019) முதல் எதிர்வரும் (15.09.2019)ம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment