உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம்!! (படங்கள்)

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்கள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும் களனி கங்கைக்கு செல்லும் இந்த நீரில் மாசு தன்மை ஏற்பட்டுள்ளதாலும், இந்த மவுஸ்ஸாக்கலை நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று 10.09.2019 அன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தினை நல்லதண்ணி, சீத்தகங்குல கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியோர் ஒன்றினைந்து மேற்கொண்டனர்.

இதன்போது நீர்தேகத்தில் உள்ள பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத நிலையில் காணப்பட்ட பொருட்களை அகற்றும் பணி விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நல்லதண்ணி, மோகினி நீர்வீழ்ச்சி, மறே நீர்வீழ்ச்சி மற்றும் காட்மோர் நீர்வீழ்ச்சி மற்றும் சீத்தகங்குல ஓயா போன்ற பகுதிகளில் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்காத பொருட்களையே இவ்வாறு 10.09.2019 அன்று அகற்றப்பட்டது.

நல்லதண்ணி, சீத்தகங்குல கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் இலங்கை மின்சார சபை, மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தின் பாதுகாப்பு படையினர், கடற்படை அதிகாரிகள், நல்லதண்ணி பொலிஸார், ஆகியோர் இந்த சிரமதான பணியில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டத்தினூடாக சேகரிக்கப்பட்ட குப்பைகளை மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவுக்கு ஒப்படைத்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment