ஒரிஜினல் அப்பாவுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வரும் சேரப்பா! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வீட்டுக்குள் வரும் சேரன் லாஸ்லியாவுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார் சேரன்.

எவிக்ஷன் முறையில் வெளியேறிய அவர், சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் இந்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாது.

சேரன் வெளியே அனுப்பப்பட்டதால் விரக்தியில் உள்ள வனிதா, விளையாட்டில் ஆர்வமே இல்லாமல் இருக்கிறார்.

முகென் குடும்பத்தினர்

இந்நிலையில் இன்று போட்டியாளர்களின் குடும்பத்தினர், அவர்களை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர்.

அந்த வகையில் முகெனின் தங்கையும் தாயாரும் வரும் காட்சிகள் முதல் புரமோவில் காட்டப்பட்டது.

சேரனே அழைத்து வருகிறார்

இந்நிலையில் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பாவும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

அவரை லாஸ்லியா சேரப்பா சேரப்பா என அழைத்து வந்த சேரனே அழைத்து வருகிறார்.

குளிர் தேசத்தில் கஷ்டம்குளிர் தேசத்தில் கஷ்டம் லாஸ்லியா தனது அப்பாவை பார்த்து பத்து வருடங்கள் ஆவதாக கூறியுள்ளார்.

தங்களுக்காக குளிர்தேசத்தில் கஷ்டப்பட்டு வருவதாகவும் கூறி கலங்கினார்.

பெரிய இன்ப அதிர்ச்சி

இந்நிலையில் லாஸ்லியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்த பிக்பாஸ் லாஸ்லியாவின் அப்பாவை அழைத்து வந்துள்ளார்.

அவரை கையோடு கூட்டிக்கொண்டு சேரப்பா சீக்ரெட் ரூமில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது நிச்சயம் லாஸ்லியாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

வனிதா ஹேப்பி

அதே நேரத்தில், அப்பாடா.. சேரன் வெளியே போய் விட்டார் இனி நிம்மதி என்று நேற்றே வேலையை காட்டிய கவினுக்கும் இது அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.

ஆனால் சேரனின் ரீஎன்ட்ரியால் வனிதா நிச்சயம் மகிழ்ச்சியடைவார்.

வனிதாவுக்கும் சர்ப்ரைஸ் அளிக்கவுள்ளார் பிக்பாஸ்.

இந்த காட்சிகள் நாளை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

Comments (0)
Add Comment