ரூ.500 அபராதத்துடன் இலவச ஹெல்மெட் – ஒடிசா போலீசாரின் புது முயற்சி..!!

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. விதிமீறல் வழக்கில் பிடிபடும் நபர்கள் பல ஆயிரக்கணக்கில் அபராதம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் சாலை விதிமீறல்களுக்கான அபராத தொகை பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கும் ஒடிசா போலீசார் புதிய ஹெல்மெட்டை கொடுத்தனுப்புகின்றனர்.

மேலும், ஹெல்மெட் அணிந்து வருவோருக்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும் வாழ்த்து அட்டைகளை அளித்து உற்சாகப்படுத்தினர்.

Comments (0)
Add Comment