கர்நாடகாவில் சோகம் – விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி..!!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள கடல் பகுதியில் கரைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் போட்டிருந்த தடுப்புகளையும் மீறி சில சிறுவர்கள் சிலையை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் இறங்கினர். ஆழமாக தூர் வாரப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள் சிலையின் எடையால் அழுத்தப்பட்டு தண்ணீருக்குள் மூழ்கினர்.

இதில் 6 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விநாயகர் சிலை கரைப்பின்போது 6 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment