அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டடம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள்: 11-9-2001..!!

2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே தேதியில் பயணிகள் விமானங்களை தீவிரவாதிகள் கடத்தி அமெரிக்காவில் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. வடகோபுரம் 102 நிமிடங்கள் எரிந்து நொறுங்கியது.

இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 246 பொதுமக்கள், 19 தீவிரவாதிகள் உள்பட மொத்தம் 2973 பேர் கொல்லப்பட்டனர். இதில் 300 பேர் வெளிநாட்டவர் ஆவர். இந்த தாக்குதலுக்கு பின்லேடனின் அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது.

Comments (0)
Add Comment