சோப்பூர் என்கவுண்டர்- லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலையில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். போலீஸ் தரப்பில் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தளபதி ஆசிப் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சோப்பூரில் பழ வியாபாரி வீட்டில் 4 பேரை துப்பாக்கியால் சுட்டது மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஷபி ஆலமை சுட்டதில் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.

சோப்பூர் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின்போது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment