ஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.!! (படங்கள்)

“ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே.. உன் கண்ணு சூப்பரா இருக்கு” என்று பெண்ணை போதையில் வழிமறித்து பேசியுள்ளார் காக்கி சட்டைக்காரர் ஒருவர்! யூனிபார்மில் இருந்த ஒரே காரணத்துக்காக, அவர் மீது கை வைக்காமல் ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்! கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தம்பதி ரவிக்குமார் – சரண்யா. கீரணத்தத்தில் சரண்யாவின் தாய் வசித்து வருகிறார்.

அதனால் நேற்று அம்மாவை பார்க்க டூவீலரை எடுத்து கொண்டு கிளம்பினார் சரண்யா. அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை கடந்து டூவீலரில் சரண்யா செல்லவும், அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் அவரை பார்த்துவிட்டார். யூனிபார்ம் போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடையில் நின்றிருந்த அந்த போலீஸ்காரர், சரண்யாவை பார்த்து என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பின்னாடியே துரத்தி கொண்டு வந்தார்.

ஆபாசம் இதை கண்டு பயந்து போன சரண்யா, இன்னும் வேகமாக டூவீலரை ஓட்டினார். அப்போதும் பைக்கில் விரட்டிக் கொண்டு வந்தார் போலீஸ்காரர். ஒரு கட்டத்தில் சரண்யாவின் டூவீலரை வழிமறித்துவிட்டார். பிறகு, “ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே.. உன் கண்ணு அழகா இருக்கே” என்று சொல்லி ஆபாசமாக பேச ஆரம்பித்துவிட்டார்.

காக்கி சட்டைக்காரர் காக்கி சட்டைக்காரர் இதனால் அதிர்ந்து போன சரண்யா, டூவீலரை எடுத்து கொண்டு திரும்பவும் புறப்பட்டார். அப்போதும் காக்கி சட்டைக்காரர் பின்னாடியே வந்தார். இறுதியில் சரண்யா, அங்கிருந்த ஒரு பேன்ஸி ஸ்டோருக்குள் தஞ்சம் அடைந்தார். அந்த கடைக்குள் நுழைந்த போலீஸ்காரர், திரும்பவும் சரண்யாவை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்.

வாக்குவாதம் இதையடுத்துதான் சரண்யா தனது கணவருக்கு போனில் தகவல் சொல்ல, கணவர் உடனே தனது நண்பர்களை அழைத்து கொண்டு அத்திப்பாளையம் பகுதிக்கு வந்தார். போதையில் நின்று மனைவியை வர்ணித்து கொண்டிருந்த போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கணவர். பொதுமக்களும் அங்கு கூடிவிட்டனர். போலீஸ்காரர் தன்னுடைய பைக்கில் நிறைய சரக்கு பாட்டில்களை வைத்திருந்ததையும் பொதுமக்கள் பார்த்தனர். யூனிபார்ம் யூனிபார்ம் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி ஆபாசமாக பேசியதாலும், மது பாட்டில்களை பைக்கில் சுற்றி திரிவதையும் கண்டு இன்னும் கோபம் ஆனார்கள். அதனால் போலீஸ்காரரிடம், “யூனிபார்ம்-க்கு மரியாதை தர்றோம்.. இதை நீ போட்டிருக்கிறதால உன்னை அடிக்காம விடறோம்” என்று சொல்லி கோவில் பாளையம் போலீசில் அந்த நபரை ஒப்படைத்தனர்.

சஸ்பெண்டு விசாரணையில் காக்கி சட்டைக்காரர் பெயர் பிரபாகரன் என்பதும் பெரியநாயக்கன் பாளையம் போலீஸ் அதிகாரி ஒருவரின் கார் டிரைவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்பிக்கு விஷயத்தை சொல்லவும், பிரபாகரனை அந்த நொடியே சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment