ஸ்கூல் பாத்ரூமில்.. ஜெயந்தியுடன்.. ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர் மக்கள். !! (படங்கள், வீடியோ)

ஸ்கூலிலேயே ஜெயந்தியுடன் தகாத உறவில் ஈடுபட்டார் வாத்தியார் சரவணன். இந்த விஷயம் அறிந்த ஊர்மக்கள், கிளாஸ் ரூமுக்குள்ளேயே புகுந்து சரமாரியாக அடித்து உதைத்து இழுத்து சென்றுள்ளனர். powered by Rubicon Project நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதே பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக 4 வருஷமாக வேலை பார்ப்பவர் சரவணன். இவருக்கும், அதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்து வரும் ஜெயந்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி இருவரும் ஸ்கூல் பாத்ரூமிலேயே உறவில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதை மாணவர்களே நேரடியாக பலமுறை பார்த்ததாகவும் தெரிகிறது.

டிபாசிட் இதுகுறித்து பலமுறை இருவருக்கும் பள்ளி நிர்வாகம், மற்றும் பெற்றோர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே, தபால் நிலையத்தில், ‘டிபாசிட்’ வாங்கும் முகவராக ஜெயந்தி உள்ளார். ஆனால் சில மாதங்களாக பொதுமக்களிடம் பெற்ற டிபாசிட் பணத்தை, தபால் நிலையத்தில் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்தது. சரவணன் சரவணன் இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த ஜெயந்தியும், சரவணனும், தகாத உறவில் பள்ளி வளாகத்திலேயே இருந்திருக்கிறார்கள். இதை பார்த்துவிட்ட ஒரு மாணவன், அவன் வீட்டில் இதை பற்றி சொல்ல, கொஞ்ச நேரத்தில் ஊரே திரண்டு ஸ்கூலுக்கு வந்துவிட்டது. ஆனால் சரவணனும், ஜெயந்தியும் ஸ்கூலில் இல்லை. இதனால் எல்லா கிளாஸ் ரூமூக்கு உள்ளேயும் புகுந்து இருவரையும் தேட ஆரம்பித்தனர்.

தப்பி சென்றார் கடைசியில், 2 பேரும் ஸ்கூல் பாத்ரூமில் இருந்து வெளியே வந்ததை மக்கள் பார்த்துவிட்டனர். நிறைய பேர் பேசும் சத்தம் கேட்டதும் உஷாரான, சரவணன் முதலில் ஜெயந்தியை அங்கிருந்து சுவர் ஏறிக்குதித்து தப்பி செல்ல வைத்துவிட்டார். ஜெயந்தி போகும்போது, பள்ளியில் இருந்த டிபாசிட் புத்தகங்களை எடுத்து சென்றுள்ளார். ஜெயந்தி எங்கே? ஜெயந்தி எங்கே? இதன் பிறகு எதுவும் தெரியாதது போல கிளாஸுக்குள் சென்றார் சரவணன். பின்னாடியே போன ஊர் மக்கள், “எங்கே ஜெயந்தி” என்று கேட்டு சரவணனை அடித்து உதைத்து தரதரவென சட்டையை பிடித்து இழுத்து வந்தனர். அப்போது ஜெயந்திக்கு ஆதரவாக சரவணன் பேசவும், இன்னம் ஆவேசமடைந்த பொதுமக்கள், பள்ளி வளாகத்தில், அமர வைத்தனர்.

நடவடிக்கை “புள்ளைங்க படிக்கிற இடத்துல இனி இப்படி நடந்துப்பியா, நடந்துப்பியா” என்று கேட்டு வெளுத்து எடுத்தனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விரைந்து வந்து சரவணனை மீட்டு ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அத்துடன் கல்வி அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்து, பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆசிரியரை நைய புடைக்கும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

Comments (0)
Add Comment