வவுனியா தாண்டிகுளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதப் பாதை!! (படங்கள்)

வவுனியா தாண்டிகுளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதப் பாதையில் அச்சத்தில் மக்கள்

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இருந்து புதுக்குளம் மற்றும் திருநாவற்குளம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முச்சந்தியில் புகையிரதக் கடவை ஒன்று காணப்படுகின்றது.

குறித்த கடவையில் புகையிரத பாதுகாப்பு கேற் பொருத்தப்படவில்லை. அப்பகுதியில் ஒலி, ஒளிச் சமிஞ்சை பொருத்தப்பட்டுள்ளபோதும், குறித்த ஒலி, ஒளி சமிஞ்சை சீராக இயங்காமையாலும், அவை பழுதடைந்து காணப்படுவதாலும் செயலிழந்துள்ளன.

இதனால் அவ்வீதியால் பயணிப்போரும், வாகனங்களும் புகையிரதம் வரும் சத்தம் கேட்டே தமது பயத்தை நிறுத்த வேண்டிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வடக்கிற்கான புகையிரத சேவைகள் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஒரு சந்தியில் காணப்படுகின்றமை மக்களை அச்சம் கொள்ள வைமத்துள்ளது.

எனவே, இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவ்வீதி வழியாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும்.

இதேவேளை, குறித்த பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் கடந்த வருடம் ஒருவர் மரணமடைந்தமையும், கால்நடைகள் அடிக்கடி விபத்துக்குளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment