எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வா.. லாஸை வெளுத்த அப்பா! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலிக்கும் லாஸ்லியாவை அவரது அப்பா திட்டித் தீர்த்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவும் கவினும் காதலித்து வருகின்றனர். முதலில் சாக்ஷியை காதலித்த கவின் பின்னர் லாஸ்லியா தானாக வந்து சிக்கியதால் அவரை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினுடன் நெருக்கமாக பழகினார் லாஸ்லியா. அப்போதெல்லாம் கவினுக்கும் தனக்கும் இடையில் இருப்பது நட்புதான் என்று கூறினார். ஆனால் சாக்ஷி வெளியே போன பிறகு கவினை காதலிப்பதாகவும், வெளியே போய் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் கூறினார்.

டபுள் மீனிங் இதனால் மக்களுக்கு லாஸ்லியா மீதான மதிப்பு குறைந்தது. சமூக வலைதளங்களிலும் அவரை கழுவி ஊற்றினர். உலகமே நிகழ்ச்சியை பார்க்கிறது என்பதை கூட உணராமல் அடிக்கடி டபுள் மீனிங்கிள் பேசி பார்வையாளர்களை எரிச்சலடைய செய்தனர். பார்க்கவே இல்லை பார்க்கவே இல்லை இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார் லாஸ்லியாவின் அப்பா. பத்தாண்டுகளுக்கு பிறகு அப்பாவை பார்ப்பதால் கதறி அழுதார் லாஸ்லியா. ஆனால் அவர் அப்பா திரும்பிக்கூட பார்க்கவில்லை. இப்படியா வளர்த்தேன் இந்நிலையில் லாஸ்லியாவை அவர் திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் கார்டன் ஏரியாவில் நின்றபடி, இப்படிதான் உன்னை வளர்த்தேனா? கதைக்கக்கூடாது என பார்க்கிறேன் என்று கூறி கடுமை காட்டுகிறார்.

எதற்கு வந்தாய்? இதனை தொடர்ந்து அவரை சமாதானப்படுத்துகிறார் சேரன். அப்போது நாங்கள் அப்படி வளர்க்கவில்லை, என்ன சொல்லிவிட்டு இங்கு வந்தாய்? என்ன சொல்லி அனுப்பினேன். இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? தூக்கி எறிஞ்சுட்டு வா தூக்கி எறிஞ்சுட்டு வா மற்றவர்கள் என்னை பார்த்து காரித்துப்புற மாதிரி செய்துவிட்டாய். எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு வா என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறார்.

வைரல் வீடியோ இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறார் லாஸ்லியா. மொத்த ஹவுஸ்மேட்ஸும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Comments (0)
Add Comment