வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் போராட்டம்!! (படங்கள்)

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று (11.09.2019) மதியம் 12.30 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தினுள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

விரைவில் வடகிழக்கில் பாரிய வைத்தியர் பற்றாக்குறை? , வடகிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் , எதிர்காலத்தில் வடகிழக்கில் வைத்தியர்கள் தட்டுப்பாடு உறுதி , ராஜிதவின் அரசியல் காய்நகர்த்தலில் அப்பாவி நோயாளிகள் பலியா? , என பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு 20க்கும் மேற்ப்பட்ட வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியர்கள் 12.00 தொடக்கம் 1.00 மணி வரையிலான உணவு நேரத்தில் குறித்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment