காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்!!!

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற் பிரதேசத்திலும், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலுமான கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் அடிக்கடி மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

கடற் பிரதேசத்திற்கான காலநிலை தொடர்பில் விசேடமாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசத்தில் மேற்கில் இருந்து தென் மேற்கு பிரதேசம் நோக்கி காற்று வீசுவதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது இந்த கடற் பிரதேசத்தில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் திடீரென காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment