குற்ற வழக்கு கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அனுமதி!!

2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 1979 ஆம் ஆண்டு இல 15 இன் கீழான குற்ற வழக்கு கட்டளைச் சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு இல 15 இன் கீழான குற்ற வழக்கு கட்டளைச் சட்டத் திருத்தம் 2019 ஜுன் மாதம் 14ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் சட்டத்திருத்தத்தை கவனத்தில் கொள்வதற்காக ஒன்று கூடிய துறைசார் மதிப்பீட்டுக்குழு பல திருத்தங்களை சிபாரிசு செய்தது.

அத்தோடு சட்ட திருத்த வரைவு பிரிவினால் அதன் திருத்த குழு மட்டத்தில் திருத்தத்துடன் திருத்த சட்டமூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவையினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்டள்ள அங்கீகாரத்திற்கு அமைவாக திருத்த சட்டமூலத்தின் சாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் திருத்தத்துடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனுமதிக்காக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது.

இதனால் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரினால் குறித்த குழு திருத்தம் மற்றும் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14அம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட பின்னர் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment