இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்..!!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் கருத்துக்களை அவரது டுவிட்டர் கணக்கில் குடும்பத்தினர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய பொருளாதாரம் குறித்து தற்போது புதிதாக ப.சிதம்பரம் சார்பில் ட்விட் பதிவிடப்பட்டுள்ளது. இன்றைய ட்விட்டில், ‘இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்திய பொருளாதாரத்தால் ஏழைகள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைவான வேலை, குறைந்த முதலீடு போன்றவற்றால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சரிவு நிலை, இருளில் இருந்து நாட்டை மீட்டெடுக்க மத்திய அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment