மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம்- குறைந்தபட்ச அடிப்படை விலை 200 ரூபாய்..!!

பிரதமர் நரேந்திர மோடி அலுவல் ரீதியாக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். உள்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த சுற்றுப்பயணங்களின்போது பிரதமருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, அதன்மூலம் கிடைக்கும் தொகையானது கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

அவ்வகையில் கடந்த ஜனவரி மாதம், 1800 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மோடிக்கு வழங்கப்பட்ட 2772 பரிசுப் பொருட்கள் வரும் 14-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. பரிசுப் பொருட்களின் அடிப்படை விலை குறைந்தபட்சம் 200 ரூபாயாகவும், அதிகபட்சம் ரூ.2.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் பட்டேல் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment