தேன்கனிக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொடியாளம் கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் மதகொண்டபள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவரது மகன் கணேஷ் (வயது23) என்பவர் 14 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, மாணவி தண்ணீர் கொடுத்தபோது கணேஷ் வீட்டின் கதவை பூட்டிவிட்டு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதை அறிந்த மாணவி கூச்சலிட்டார். இதனால் பதட்டம் அடைந்த கணேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் தாயார் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தப்பிஓடிய கணேஷை தேடி வருகின்றன். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments (0)
Add Comment