ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டு வெடிப்பு..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மத்திய பகுதியில் அமெரிக்க தூதரக அலுவலகம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தூதரகத்தின் அருகே ராக்கெட் குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது நடத்திய தாக்குதல் நினைவு நாளையொட்டி இக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது.

Comments (0)
Add Comment