ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது!

ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது!! முகாமையாளர் குருஸ் தெரிவிப்பு!

வவுனியாவில் இதுவரை 143 மாதிரி கிராமங்களில்4329 வீடுகள் அமைக்கபட்டுள்ளதுடன், எந்த ஒரு காராணத்திற்காகவும் ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடமாட்டாது என்று வவுனியா மாவட்ட வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் வி,எம்.வி.குருஸ் தெரிவித்தார்.

வவுனியா வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்….

போரால் பாதிக்கபட்டிருந்த மக்கள் வவுனியா நோக்கி வருகைதந்தநிலையில் அவர்களிற்கான வீட்டு தேவைகள் முழுமையாக கிடைக்கபெறவில்லை. எனவே அவர்களினையும் கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வீடமைப்பு அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம். கடன்வசதிகள், கடனோடு இணைந்த மானிய திட்டங்கள், அரச ஊழியர்களிற்கான திட்டங்கள், மற்றும் மேசன் தொழிலாலர்களிற்கான பயிற்சி நெறிகள்,சிறு நீரக நோயாளர்களிற்கான வீடமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த வருகின்றோம். இதேவளை வவுனியா மாவட்டத்தின் அனைத்து பிரதேச்செயலக பிரிவுகளிலும் 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 143 மாதிரிகிராம வீட்டுதிட்டங்களை வழங்கியிருக்கின்றோம்,

இதன்மூலம் 4329 வீடுகள் அமைக்கபட்டு பயனாளிகளிற்கு வழங்கபட்டுள்ளதுடன் உட்கட்டுமான வசதிகளையும் வழங்கியுள்ளோம்.இந்த வேலைதிட்டங்களிற்காக இதுவரை 2850 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் வவுனியா மாவட்டத்திலே தகர கொட்டில்களிலே வாழ்ந்து வந்த பலர் இன்று பலனடைந்துள்ளனர். விசேடமாக காணி அற்றவர்களிற்கு காணி வழங்கபட்டுள்ளதுடன் அவர்களிற்கான வதிவிட உரிமை உறுதிப்படுத்தபட்டுள்ளது

இதேவளை வவுனியா மாவட்டத்தில் வீட்டு திட்டம் ஆரம்பிக்கபட்டு இரண்டாம் கட்ட நிதி விடுவிக்கபடாமல் உள்ள மாதிரி கிராமங்களிற்கு மிகவிரைவில் நிதி வழங்கபடவுள்ளதுடன்
எந்த காராணத்திற்காகவும் ஆரம்பிக்கபட்ட வீட்டு திட்டங்கள் இடை நிறுத்தபடாது. அத்துடன் கிராமங்களில் தனியாக வீடுகள் தேவையானவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். எமது அமைச்சரிடம் இது தொடர்பாக கடந்தகாலங்களில் பலர் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். எனவே எமது தலைமை அலுவலகத்தில் இருந்து அவ்வாறான திட்டங்கள் உருவாக்கபட்டு எமக்கு அறிவிக்கபட்டால் நாம் அதனை வழங்குவதற்கு முயற்சிசெய்வோம். எதிர்வரும் காலங்களில் கிராம்மட்டங்களில் சமூக அமைப்புகளை உருவாக்கி வீடு இல்லாதவர்களின் விபரங்கள் பெறப்பட்டு அவர்களிற்கான தேவைகள் பூர்த்திசெய்யபடும் என்றார்.

குறித்த ஊடக சந்திப்பில் வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment