அச்செழு தேவாலயத்துக்கு சுற்று மதில் – த.சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு!! (படங்கள்)

அச்செழு தேவாலயத்துக்கு சுற்று மதில் – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட அச்செழு புனித ஹென்றியரசர் தேவலயத்துக்கு ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. ரூ. 07 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள இச்சுற்றுமதிலுக்கான நிதியினை யாழ்.மவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோப்பாய்த்தொகுதிக்கான அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இம்மதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று 11.09.2019 புதன்கிழமை மாலை 04 மணியளவில் அச்செழு ஹென்றியரசர் ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளரும், முன்னாள் வடமாகாணசபையின் உறுப்பினருமான பா.கஜதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேசசபையின் அச்செழு வட்டார உறுப்பினர் த.திருநாவுக்கரசு, உரும்பிராய் வடக்கு வட்டார உறுப்பினர் சி.அகீபன் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பகீரதன் மற்றும் பங்குப்பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டு கற்களை நாட்டி வைத்தனர்.

தமது நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியமைக்காக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்குத்தமது நன்றியறிதல்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment