அக்காவுக்கு நாளை திருமணம்: பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தம்பி பலி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் விக்னேஷ் (வயது 20). இந்த நிலையில் விக்னேசின் அக்காவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அக்காளின் திருமணத்துக்காக விக்னேஷ் செங்கமங்களம் கடை வீதியில் நள்ளிரவில் வரவேற்பு பேனர்களை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது பேனர் கட்டிய போது திடீரென சரிந்ததால் மேலே சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் விக்னேஷ் மீது மின்சாரம் தாக்கியதால் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதை பார்த்து அங்கு நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பலியான விக்னேசை உடலை மீட்டு அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து விக்னேஷ் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இறந்தது.

அக்காவின் திருமண விழாவுக்காக பேனர் கட்டிய தம்பி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment