பிரதமரினால் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என அறிவிப்பு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறை அமைச்சின் ராஜகிரியில் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தை நடத்திச் செல்வதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பிரதமரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் மன்னார் பகுதியில் இடம்பெற உள்ள நிகழ்வுகள் சிலவற்றில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் பிரதமரினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என பிரதமரின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதமரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment