நல்லூரிலிருந்து பாத யாத்திரை!! (படங்கள்)

நல்லுாா் கந்தசுவாமி கோவிலிருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாத யாத்திரை இன்று காலை ஆரம்பமானது.

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற அங்கிருந்து திருகோணமலை சென்று மட்டக்களப்பு சென்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.

இந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் நடாத்தப்படவுள்ளது.

நாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம்மேம்பட இறையருள் வேண்டியயே இந்த பாதயாத்திரை இடம்பெறுகின்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment