பிரசவத்தின் பின்னர் மாயமான நாவலப்பிட்டிய தாய்!!

கடந்த மாதம் 31 ஆம் திகதி வயிறு வலி காரணமாக நாவலப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது அவர் குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்ததை வைத்தியர்கள் அறிந்துக் கொண்டுள்ளனர்.

பின்னர் இம்மாதம் முதலாம் திகதி சத்திர சிகிச்சை மூலம் பெண் குழந்தை ஒன்றை குறித்த பெண் பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் சிசு மோசமான உடல் ஆரோக்கியத்தில் இருந்த காரணத்தால் நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசு சிகிச்சை பிரிவில் சிசுவை அனுமதித்துள்ளனர்.

பின்னர் கடந்த 6 ஆம் திகதி வங்கியில் கடன் தொகை ஒன்றை பெற வேண்டி உள்ளதாக கூறி குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியுள்ளார்.

எவ்வாறாயினும் ,குறித்த பெண் மீண்டும் வைத்தியசாலைக்கு வராததால் சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் நாவலப்பிட்டிய பொலிஸாருக்கு அறிவித்தனர்.

குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதியாகும் போது வழங்கியிருந்த விலாசம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், அவர் குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த பெண்ணுக்கு மேலும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், குறித்த பெண்ணை தேடி நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments (0)
Add Comment