வீடியோ – மத்திய பிரதேசத்தில் போலீசாக மாறி, போக்குவரத்து நெரிசலை குறைத்த மந்திரி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு விளையாட்டு மற்றும் உயர் கல்வித்துறை மந்திரியாக ஜிதுபட்வாரி என்பவர் இருந்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை மாலை இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றார்.

நகரின் முக்கிய பகுதியான சாணக்யபுரி பகுதியில் சென்றபோது இவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்திலேயே வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து நெரிசல் மேலும் அதிகரித்தது.

ஆனால், அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் போலீஸ்காரர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் கடும் நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறியதை பார்த்த மந்திரி ஜிதுபட்வாரி சற்றும் தாமதிக்காமல் தானே சாலையில் இறங்கி போலீஸ்காரர் போல பணியில் இறங்கி போக்குவரத்து நெரிசலை குறைத்தார்.

சிறிது நேரத்திலேயே அவரது காரின் பின்னால் வந்த அவரது பாதுகாவலர் மற்றும் உதவியாளர்களும் அங்கு வந்தனர். அவர்களும் மந்திரியுடன் சேர்ந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு கூடுதல் போலீஸ்காரர்களும் அங்கு வந்துள்ளனர். போக்குவரத்து சிக்னல்கள் சரியாக இயங்காததே நெரிசலுக்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதனை சரிசெய்ய போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments (0)
Add Comment