வவுனியாவில் முதியோர் தின விளையாட்டுப் போட்டி!! (படங்கள்)

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட முதியோர் சங்க உறுப்பினர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட சமூக சேவை அலுவலகத்தில் இன்று (12.09.2019) காலை தொடக்கம் மதியம் வரை இடம்பெற்றது.

மாவட்ட சமூக சேவை அலுவலகர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டு போட்டியில் கிடுகு பின்னுதல் ,வேகநடை , சங்கீதக்கதிரை , கூடைக்குள் பந்துபோடுதல் என பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்தன

இப் போட்டிகளை விளையாட்டு உத்தியோகத்தர் பிந்துசன் வழிநடாத்தியதுடன் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் வசந்தரூபன் ஒழுங்கைப்பாளராக இருந்தார்.

இன்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எதிர்வரும் 19.09.2019 வியாழன் நடைபெறவுள்ள மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம்முறை மாகாண மட்ட முதியோர் தின விழா வவுனியாவில் 18.10.2019 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment