கிளி/முருகானந்தா வித்தியாலய புதிய வகுப்பறை கையளிப்பு!! (படங்கள்)

கிளி/முருகானந்தா ஆரம்ப வித்தியாலய புதிய வகுப்பறைத் தொகுதி ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி முருகானந்தா ஆரம்ப வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத்தொகுதி ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் இன்று (12) முற்பகல் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2018 டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையின் புதிய வகுப்பறைத் தொகுதி கௌரவ ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 5.85 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தின் பொறியியற் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் , கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி, வலய கல்வி பணிப்பாளர் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment