கஞ்சிபானி இம்ரானின் தந்தை உட்பட 6 பேர் கைது!!

சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை பார்க்க இன்று (12) மாலை வந்த உறவினர்களிடம் இருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை சோதனையிட்டதில் அதில் இருந்து இரண்டு கைப்பேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரத்கம பொலிஸாரால் கஞ்சிபானி இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை தொலைப்பேசி ஊடாக அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரான் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இம்மாதம் 20 ஆம் திகதி வரை சிறைச்சாலையில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன கடந்த தினம் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment