விமான பயணிகளிடம் ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள வேண்டுகோள்!!

தீப்பற்றும் அபாயம் இருப்பதால் அப்பள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணனியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அப்பள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணனியின் பெட்டரி அதிகளவில் உச்சம் அடையும் அவதானம் இருப்பதாக அந்நிறுவனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

குறித்த மடிக்கணனி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையிலேயே விநியோகம் செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விமான பயணிகளிடம் இருக்கும் குறித்த மடிக்கணினி அவ்வாறான தாக்கத்திற்கு உட்படாத என அப்பள் நிறுவனத்தின் ஊடாக உறுதி செய்து கொள்ளுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விமான நிலையத்தில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பெட்டரி மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அவ்வாறு உறுதி செய்ய முடியாது போகும் பட்சத்தில் பயணிகளுக்கு குறித்த மடிக்கணனியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

எனவே அப்பள் நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று அதில் உள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment