எந்தவொரு தீவிரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது – அமெரிக்கத் தூதுவர்!!

எந்­த­வொரு இடத்­திலும், எத்­த­கைய வழி­மு­றை­க­ளி­லேனும் நடை­பெ­று­கின்ற தீவி­ர­வாதம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­தது என்று குறிப்­பிட்­டி­ருக்கும் அமெ­ரிக்கா, 18 வரு­டங்­க­ளுக்கு முன்னர் 9/11 தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற நேற்­றைய தினத்தில் உயிர்த்த ஞாயி­று ­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் உயி­ரி­ழந்த மற்றும் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரையும் நினை­வு­கூர்ந்­தி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­காவில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 11ஆம் திகதி படு­மோ­ச­மான தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 18 வரு­டங்கள் கடந்­தி­ருக்கும் நிலையில், இது தொடர்பில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் நேற்று புதன்­கி­ழமை தனது டுவிட்டர் பக்­கத்தில் இவ்­வாறு பதி­விட்­டி­ருக்­கிறார். அதில் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது:

எந்­த­வோர் இடத்­திலும், எந்­த­வொரு வழி­மு­றை­க­ளிலும் இடம்­பெறும் தீவி­ர­வாதம் என்­பது ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யா­த­தாகும். அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற 9/11 தாக்­கு­தல்­க­ளிலும், இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயி­று­ தினத் தாக்­கு­தல்­க­ளிலும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளையும் அவர்­க­ளது குடும்­பத்­த­வர்­க­ளையும், அதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் இன்­றைய தினத்தில் (நேற்று) நினை­வு­ கூ­ரு­கின்றோம்.

தீவி­ர­வா­தத்தைப் புறக்­க­ணித்து, சமூக ஒற்­று­மைக்கு வர­வேற்­ப­ளித்து அதனை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு இலங்கையுடனும், மாலைதீவுடனும் நாங்கள் ஒன்றிணைந்து செயற் படுவோம்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment