தேசத்தை ஒன்றாக இணைப்பதே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பணி!!

தேசத்தை ஒன்றாக இணைப்பதே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பணி என பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய அமைப்பின் கொள்கைகளுடன் உடன்படும் வேட்பாளரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகேகொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment