பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் பதவி நீக்கப்படுவதற்கான அபாயம்!!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏ.எச்.எம் பௌசி, லக்ஷமன் யாபா அபேவர்தன, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் விஜித் விஜேமுனி சொய்சா ஆகியவர்களின் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக குருணாகல் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை 7 நாட்களுக்குள் கருத்து வழங்குமாறு தெரிவித்திருந்த போதும், அவர்கள் வழங்கிய காரணங்கள் போதுமானதாக இல்லாததால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவர்கள் ஒழுக்காற்று குழு முன்னிலையில் தங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment