ரணிலையே முதலில் சந்­திக்­கி­றது கூட்­ட­மைப்பு : பாரா­ளு­மன்றில் செவ்­வா­யன்று இடம்­பெறும்!!

தென்­னி­லங்­கையில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான சூழல் சூடு­பி­டித்­துள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முதலில் சந்­திக்­க­வுள்­ளது.

நாளை மறுதினம் செவ்­வாய்­க் கி­ழ­மை­யன்று பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நடை­பெறும் இந்தச் சந்­திப்பில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான பாரா­ளு­மன்றக் குழு­வினர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு தெரி­விக்­கையில்,
அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான அறி­விப்பு இன்­னமும் உத்­தி­யோக ப+ர்வமாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஜனா­தி­பதி வேட்­பா­ளரில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் இது­வ­ரையில் எவ்­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுத்­தி­ருக்­க­வில்லை. இந்­நி­லையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சந்­திக்­க­வுள்­ளது. இந்தச் சந்­திப்பு பெரும்­பாலும் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெறும் என்றே எதிர்­பார்க்­கின்றோம்.

சஜித் பிரே­ம­தா­ஸவை சந்­தித்­த­போது தனக்கு ஆத­ரவை வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார். அவரை மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் சந்­தித்­தி­ருந்தேன். அதன் பின்னர் பல பொது நிகழ்­வு­க­ளிலும் சந்­தி­ருந்­த­போது கருத்­துப்­ப­ரி­மாற்­றங்­களைச் செய்­தி­ருக்­கின்றார். மேலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் கூட்­ட­மைப்பு சந்­திப்­புக்­களை நடத்­து­வ­தற்­கான தினம் குறித்து இது­வ­ரையில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான கோரிக்­கையும் எமக்கு விடுக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினைப் பொறுத்­த­வ­ரையில் நாம் சகல வேட்­பா­ளர்­க­ளு­டனும் எமது மக்­களின் அபி­லா­ஷை­களை முன்­னி­றுத்தி பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இருக்­கின்றோம். அதன்­பின்னர் எமது மக்­களின் நிலைப்­பா­டு­க­ளையும் உள்­ளீர்த்து யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்பில் இறு­தித்­தீர்­மானம் எடுத்து அறி­விக்­கவே திட்­ட­மிட்­டி­ருக்­கின்றோம்;.

ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­ப­டாத நிலை­யிலும் வேட்­பா­ளர்­களை முன்­னி­றுத்தும் செயற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­காத நிலை­யிலும் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ­ச­ர­மாக முடி­வு­களை எடுக்­காது. இந்தக் கரு­மத்­தினை மிகவும் கவ­ன­மாக கையாள வேண்­டி­யுள்­ளது என்றார்.

முன்­ன­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும், சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் இடை­யி­லான உத்­தி­யோ­கப்­பற்­றற்ற சந்­திப்­பொன்று அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது. அதன்­போது சம்­பந்தன் எவ்­வி­த­மான உறு­திப்­பா­டு­க­ளையோ, தீர்க்­க­மான தீர்­மா­னத்­தி­னையோ அறி­வித்­தி­ருக்­க­வில்லை.

அத­னை­ய­டுத்து கடந்த வாரத்தின் ஆரம்­பத்தில் யாழிற்குச் சென்­றி­ருந்த அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா எம்.பி தலை­மையில் கூட்­ட­மைப்­பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். எனினும் இவ்விரு சந்திப்புக்களின் போதும் சஜித் பிரேமதாஸ தனக்கான ஆதரவினை வழங்குமாறு கோரியிருந்தார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளார் அறிவிக்கப்பட்ட பின்னரேயே கூட்டமைப்பு தனது தீர்மானத்தினை பகிரங்கப்படுத்தும் என்று நேரடியாகவே கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

Comments (0)
Add Comment