கூகுளில் விக்ரம் லேண்டரை அதிகம் தேடிய பாகிஸ்தானியர்கள்..!!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு குறித்த விவரங்களை இந்தியர்களை போல பாகிஸ்தான் மக்களும் கூகுளில் ஆர்வமுடன் தேடியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 7-ந் தேதி கூகுளில் “சந்திரயான்-2” “இஸ்ரோ” “விக்ரம் லேண்டர்” உள்ளிட்ட வார்த்தைகள் அதிகம் தேடப்பட்டதாக ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ தரவுகள் தெரிவிக்கின்றன.

அதில், இந்தியர்களை போல பாகிஸ்தான் மக்களும் “சந்திரயான்-2” “இஸ்ரோ” “விக்ரம் லேண்டர்” ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் அதிகம் தேடியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் விக்ரம் லேண்டரை பற்றி அறிந்து கொள்வதில் இந்தியர்களை விட பாகிஸ்தானியர்களே அதிகம் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக விக்ரம் லேண்டர் தொடர்பை இழந்ததும் “இந்தியாபெயில்ஸ்” (இந்தியா தோற்றுவிட்டது) என்ற ஹேஸ்டேக் மூலம் டுவிட்டரில் இந்தியாவை பாகிஸ்தானியர்கள் கேலி செய்தனர்.

அதற்கு பதிலடியாக “வொர்த்லெஸ் பாகிஸ்தான்” (பயனற்ற பாகிஸ்தான்) என்ற ஹேஸ்டேக்கை இந்தியர்கள் உலக அளவில் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment