பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஒக்டோபர் 30 வரை நீடிப்பு!!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பாராளுமன்ற தெரிவுக்குழுவின் கால எல்லை பாராளுமன்றத்தின் 102 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment