தலைமை ஆசிரியரை கத்தியால் மிரட்டி வழிப்பறி- கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது..!!

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன்(52). காஞ்சிபுரம் மாவட்டம் தாத்தாம்பூண்டி உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 19-ந்தேதி இரவு 10 மணி அளவில் முனிகிருஷ்ணன் கீழ்கொடுங்காலூர் கிராமத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் வந்தார்.

விவசாய நிலத்துடன் வீடு தனிமையாக உள்ளது. வீட்டிற்கு செல்லும் மண்பாதையில் சென்ற போது 3 பேர் வந்தவாசிக்கு எப்படி செல்ல வேண்டும் என அவரை மடக்கி வழி கேட்டனர். அப்பேது ஒருவன் முனிகிருஷ்ணன் கழுத்தில் கத்தியை வைத்து கையில் இருக்கும் பணத்தை கொடு என கேட்டுள்ளனர். இல்லை என முனிகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரது பையில் இருந்து ரூ.1500 எடுத்துக்கொண்டு செல்போனை பிடுங்க முயன்றனர். அப்போது அவர் கூச்சலிட்டதால் 3 பேரும் தப்பி ஓடினர்.

அப்போது வழிபறியில் ஈடுப்பட்ட ஒருவர் செல்போனை தவறவிட்டு ஓடியது தெரியவந்தது. இது குறித்து முனிகிருஷ்ணன் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.

அப்போது முனிகிருஷ்ணன் கொடுத்த செல்போனை வைத்து விசாரணை நடத்தினர். அதில் 3 பேரும் வந்தவாசியை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது.

பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் தலைமை ஆசிரியரை கத்தியால் மிரட்டி பணம் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.

கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ரூ. ஆயிரம் செலவு செய்து விட்டதாகவும் மீதம் இருந்த ரூ.500 மட்டும் போலீசார் பறிமுதல் செய்தனர். 3 மாணவர்களும் செய்யார் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருபவர்கள் என்பது தெரியவந்தது. கைது செய்யபட்ட 3 பேரையும் வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

ஒருவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், 2 பேர் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Comments (0)
Add Comment