வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம்!! (படங்கள்)

வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் : வவுனியாவில் மூன்றாவது இடத்தினை பெற்ற மாணவி சுவேதா சிவஐங்கரன்

வைத்தியராகி மக்களுக்கு தரமான சேவையினை வழங்குவதே எனது இலட்சியம் என புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி சுவேதா சிவஐங்கரன் தெரிவித்துள்ளார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது பெற்றமை தொடர்பில் குறிப்பிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நான் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளேன்.

நான் இந்த வெற்றியினை பெற்றமைக்கு உறுதுணையானவிருந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு எனது எதிர்கால இலட்சியம் வைத்தியர் வந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவதே ஆகும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய 169 மாணவர்களில் 81 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் 101 – 151 க்கு இடைப்பட்ட புள்ளிகளை 76 மாணவர்களும் , 71 -100க்கு இடைப்பட்ட புள்ளிகளை 10 மாணவர்களும் 00 -70 க்கு இடைப்பட்ட புள்ளிகளை 02 மாணவர்களும் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை அவர்கள் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment