முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்த ஆலோசகர்கள் – ஆளுநர்!! (படங்கள்)

முதியவர்கள் நம் சமுதாயத்தின் மூத்தஆலோசகர்கள் . அவர்கள் உலகத்தை தொடுவதற்கான இன்றைய புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

கைதடி முதியோர் இல்லத்தில் (07) நடைபெற்ற முதியோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்களினால் 04 முதியவர்களுக்கான முதுசம் விருது, மாவட்ட ரீதியாக 04 சமூகசேவையாளர் விருதும் வழங்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment