வவுனியாவில் 2020ம் ஆண்டு பசுமையாக மாறவுள்ள பாடசாலை!! (படங்கள்)

வவுனியாவில் 2020ம் ஆண்டு பசுமையாக மாறவுள்ள பாடசாலை : குவியும் பாராட்டுக்கள்

பசுமையான பாடசாலையினை உருவாக்கும் நோக்கில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இன்று காலை 150 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் செயற்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் வேலைத்திட்டத்தை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 1997ஆம் ஆண்டு மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் முதற் கட்டமாக தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடுவதற்காக 150 மரக்கன்றுகள் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை 2009ஆம் ஆண்டு பழைய மாணவர்களால் பாடசாலை இலட்சினை அமைக்கப்பட்டு இன்று சம்பிரதாய பூர்வமாக பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலை ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment