பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் வனராஜா பகுதியில் விபத்து.!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா வனராஜ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று இன்று (08) மாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த 31 மாணவர்கள் கடும் காணங்களுக்கு உள்ளாகி, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை பகுதியிலிருந்து பொகவந்தலா பகுதியினை நோக்கி பயணித்துக்கொண்டிருந்து பாடசாலை சேவை பஸ் வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படாத போதிலும் பல மாணவர்கள் கடும் காணங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து எதிரே வந்த வேன் ஒன்று வழிவிடும் போது பாதை ஒடுக்கமாக காணப்பட்டதனால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது
இவ்விபத்தில் கொட்டகலை கேம்பிரிஜ்,ஹைலெவல் சர்வதேச பாடசாலை காடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் காணமடைந்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் நோர்வூட் பொகவந்தலா வெஞ்சர் டின்சின் சென்ஜோன் டிலரி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment