டிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள்! (படங்கள்)

டிசம்பர் 02 செட்டிக்குளம் முழுவதும் துக்க நாள் ! தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையால் நிறைவேற்றப்பட்டது.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி சிங்கள அரச பயங்கரவாதத்தின் இனவெறி செயலால் ஸ்ரீலங்கா இராணுவத்தால் செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்பாவி மக்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதோடு அங்கிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களில் ஐம்பத்திரண்டு பேரை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று சிங்களப் பிரதேசங்களில் வைத்து காடைத்தனமாக கொலைசெய்த அந்த நாளை பிரதேசம் தழுவிய துக்க நாளாக பிரகடணம் செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் றொணி அவர்கள் பிரேரன ஒன்றை இன்று இடம்பெற்ற சபை அமர்வில் சமர்ப்பித்தார்.

குறித்த பிரேரணையினை சபையில் கௌரவ உறுப்பினர் அவர்கள்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாவது 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி செட்டிக்குளம் மற்றும் அன்மை கிராமங்களில் ஸ்ரீலங்கா பேரினவாத அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினரால் எமது உறவுகளின் வீடுகளுக்குள் நுழைந்து ஐம்பத்திரண்டு பெயரை பலவந்தமாக கடத்தி சென்று அவர்களை படுகொலை செய்ததுடன் எங்கள் பிரதேசத்தில் உள்ள சிலரது வீடுகள் ஆதனங்கள் சேதமாக்கப்படடதுடன் பலர் நாட்டுக்குள்ளும் வெளியிலும் இடம்பெயரவும் எமது பிரதேச பொருளாதாரம் வீழ்ச்சியடையவும் இச்சம்பவமே காரணமாக இருந்தது.

எனினும் இச்சம்பவம் நடந்தேறி முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இச்சம்பவம் தொடர்பில் இன்று வரை எந்தவொரு விசாரணையும் நடைபெறாத நிலையில் இந்தக்கரியநாளை (டிசம்பர் 02) பிரதேச துக்கதினமாக இவ்வுயரிய சபை பிரகடணம் செய்ய வேண்டும் எனவும் வருடந்தோறும் இந்த நாளில் பிரதேசத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் காரியாலையங்களிலும் கறுப்புக்கொடிகள் பறக்கவிட்டு எமது துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்மொழிகிறேன்.
என சபையில் முன்மொழிந்தார்.

வவுனியாவில் இருந்து.. சன் ஜெயம்

Comments (0)
Add Comment