ராஜஸ்தான்: துர்கா சிலை கரைக்கும் போது ஆற்றில் மூழ்கி 7 பேர் பலி?..!!!

நாடு முழுவதும் துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோல்பூர் பகுதியில் ஒரு துர்கா சிலை வைக்கப்பட்டிருந்தது.

அந்த சிலையை இன்று கரைப்பதற்காக அருகில் உள்ள பர்பதி ஆற்றுக்கு கொண்டு சென்றனர். சிலையை கரைப்பதற்காக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சிலர் சென்றனர். அப்போது ஆற்றின் வேகத்தால் நிலை தடுமாறிய 7 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் போலீசார்

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Comments (0)
Add Comment