ஆசிரியர் தினத்தை முன்மாதிரியாக கொண்டாடிய வவுனியா பாடசாலை!! (படங்கள்)

ஆசிரியர் தினத்தை முன்மாதிரியாக கொண்டாடிய வவுனியா பாடசாலை

ஆசிரியர் தினத்தை முன்மாதிரியாக மரநடுகை மூலம் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயம் இன்று கொண்டாடியுள்ளது.

ஒக்டோபர் 6 ஆம் திகதி ஆசிரியர் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மரநடுகை மூலம் அத் தினத்தை வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்களும், மாணவர்களும் கொண்டாடியுள்ளனர்.

மாணவர்களின் உதவியுடன் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலை சூழலில் 50 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. இதனை பாடசாலை அதிகர் ஏ.கே.உபைத், பிரதி அதிபர் எம்.ராசிக் மற்றும் ஆசிரியர்கள் நாட்டி வைத்தனர். வெறும் விழாக்கள் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்குதல் என்பதற்கு அப்பால் இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த செயற்பாடு பலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment