வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஏடு தொடக்குதல்!! (படங்கள்)

வவுனியாவில் ஏடு தொடக்கும் நிகழ்வு பல்வேறு இடங்களிலும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்துக்களின் சிறப்பு வாய்ந்த தினங்களில் ஒன்றான விஜயதசமி இன்றாகும். நவராத்திரி பூசையின் இறுதி நாளே விஜயதசமி ஆகும். இத்தினத்தில் குருமார் மற்றும் பெரியோர்களிடம் கொண்டு சென்று சிறுவர்களுக்கு முதன் முதலாக எழுத்து கற்றுக் கொடுக்கும் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெறுவது வழக்கம்.

அதற்கமைவாக வவுனியாவில் இந்து ஆலயங்கள் மற்றும் பெரியோர்கள் ஆகியோரினால் ஏடு தொடக்கும் நிகழ்வு மேற்கொள்ளாப்பட்டது. அதனடிப்படையில் குட்செட் கருமாரி அம்மன் ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் அவர்களும்இ சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் தமிழ் மணி அகளங்கன் அவர்களும் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கி வைத்தனர்.

இதில் பலரும் வருகை தந்து பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment