பற்றைக்காடாக காட்சியளிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை!! (படங்கள்)

ஆரம்ப உழவின்றி பற்றைக்காடாக காட்சியளிக்கும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை

வவுனியா மாவட்டத்தில் எப்போதும் இல்லாத வகையில் காலபோகம் 2019-2020 ம் ஆண்டுக்கான மழை குறித்த காலத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது.இவ் மழை நீரை மிகவும் வினைத்திறனாக பயன்படுத்தி வவுனியா மாவட்ட விவசாயிகள் தரைப் பண்படுத்தலை மேற்கொண்டு வருவதுடன் நெல் விதைப்பதற்கு தயாராகி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் (06.10.2019) வவுனியா ஒமந்தையில் வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தலமையில் காலப்போகத்திற்கான நெல் விதைப்பு நடைபெற்ற போதும் கூட சகல வசதிகளுடனும் தொழிநுட்ப தகவல் மையமாக திகழும் வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையில் இதுவரையில் நெல் விதைப்பிற்கான தரை பண்படுத்தல் கூட மேற்கொள்ளானது நெல் விதைப்பிற்கான தரைகள் பற்றைக்காடாக காட்சியளிக்கின்றது.

ஏ9 வீதியில் ஒரு பக்கம் விவசாயிகளின் நெல் விதைப்பிற்கான தரைகள் பண்படுத்தப்பட்டு நெல் விதைப்பிற்காக தயாராகி வருவதுடன் ஏ9 வீதியில் விவசாயிகளின் நிலங்களுக்கு மறுபக்கம் அமைந்துள்ள வவுனியா மாவட்ட அரச விதை உற்பத்தி பண்ணையின் நெல் விதைப்பிற்கான தரைகள் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றது.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பார்கள். மழையை நம்பி மானாவாரியாக விதைக்கும் விவசாயிகளாகட்டும், இறவை பாசன விவசாயிகளாகட்டும் இரண்டு முறையிலும் விதைப்பதற்கு ஆடி மாதம் சிறப்பான மாதம். இந்த மாதத்தில் விதைத்தால் தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் கிடைக்கும் மழையை வைத்து, பயிர் வளர்ந்து விடும் என்பதால், ஆடி மாதத்தில் தான் பெரும்பாலான விவசாயிகள் விதைப்பார்கள். விதை உற்பத்தி செய்து விதை நெல் வழங்க வேண்டிய வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையே நெல் விதைப்பிற்கான ஆரம்ப தரை பண்படுத்தல் கூட செய்யாது பற்றைக்காடாக விட்டிருப்பதை கண்டு தாம் மனம் வருந்துவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆடி உழவு தேடி உழு என்ற ஆலோசனை கூறும் வவுனியா மாவட்ட விவசாய திணைக்களம் நெல் விதைப்பிற்கான ஆரம்ப தரை பண்படுத்தலை கூட செய்யாது மழை நீரை பயன்படுத்தாது இருப்பது அரச விதை உற்பத்தி பண்ணையின் நோக்கம் சிதைவடைந்திருப்பதை காணக்கூடியதாகவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment