வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு!! (படங்கள்)

வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு

வடக்கு ஆளுனரின் அறிவுறுத்தலுக்கு அமைய வீதி போக்குவரத்து தொடர்பில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண வீதி பாதுகாப்பு வாரம் அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் பணிப்புக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வடமாகாண சாலை பாதுகாப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வீதி பாதுகாப்பு வாரத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்ட்டதுடன், வீதிகளில் பயணிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.கே.உபைத், பிரதி அதிபர் எம்.ராசிக், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment