அம்பேத்கர் சிலை உடைப்பு – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள திகை கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. சிலையை சேதப்படுத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சேதமடைந்த சிலை சரிசெய்யப்பட்டது.

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். திகை கிராமத்தில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துத்துள்ளனர்.

Comments (0)
Add Comment