மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப் படி உயர்வு..!!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் முடிவடைந்ததும், மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப் படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த அகவிலைப் படி உயர்வு, ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

அகவிலைப் படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

இதுதவிர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக, அதாவது இரு மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment