குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!!

அகில இலங்கை ரீதியில் பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியும், குத்துச்சண்டை பயிற்றுவிப்பதற்கான அரச அங்கிகாரத்துடனான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தில் 08-10-2019 அன்று நடைபெற்றது.

இலங்கை பிரெஞ்சு சவாட் தேசிய சம்மேளத்தின் தலைவர் பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தது.

அதிதிகளாக தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தின் பணிப்பாளர் சஜித் ஜெயலால், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.வி.விக்கிரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அகில இலங்கை ரீதியாக 45 பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு 03-10-2019 தொடக்கம் 08-10-2019 வரை விசேட பயிற்சிகளை பெற்றிருந்தனர்.

குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான விசேட புலமை பயிற்சிகளை ஆசிய சவாட் சம்மேளனத்தின் சர்வதேச பயிற்றுவிப்பாளர் ‘கமீட் மாட்டீன்பார்’ வழங்கியிருந்தார்.

கிக் பொக்சிங் இலங்கை தேசிய சங்கத்தினதும், இலங்கை தொலைத் தொடர்பாடல் வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான ‘டிப்ளோமா’ சான்றிதழ்கள் அதிதிகளால் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாணத்தின் சார்பாக வவுனியா ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் ஆறு பயிற்றுவிப்பாளர்கள் ‘பிரெஞ்சு சவாட் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

????????????????????????????????????

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

Comments (0)
Add Comment