பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 148 என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment